
7 படங்கள்
கண்ணோட்டம்
பொன்முதுகு மரங்கொத்தி இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் பறவை. இது மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்தது. நகர்ப்புறங்களில் காணப்படும் ஒரு சில மரங்கொத்திகளில் இதுவும் ஒன்று. தனித்துவமான ஓசையெழுப்பும் இப்பறவை அசைந்து அசைந்து பறக்கும் தன்மையுடைது. கருப்பு நிற கழுத்தும், பிட்டமும் கொண்டது.