உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கத்தரி

වම්බටු වම්බටු

Solanum melongena

கத்தரி
Joydeep · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கத்தரி சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் சொலனும் மெலோங்கெனா என்பதாகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள். கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அராபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Eggplant — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கத்தரி — CC BY-SA 4.0