
10 படங்கள்
கண்ணோட்டம்
கருந்தலை மீன்கொத்தி இவை வெப்ப மண்டல ஆசியாவின் பலபகுதிகளிலும், சீனா, கொரியா, தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை மரங்களில் வாழும் மீன்கொத்தி இனத்தைச் சார்ந்தது ஆகும். இவை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இலங்கை, ஜாவா, தாய்லாந்து, மற்றும் புருனே போன்ற தீவு நாடுகளுக்குச் செல்லுகிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை காணப்படும் இடங்கள் நீர் நிலைகளுக்கு அருகில் என்றாலும் சில நேரங்களில் சதுப்பு நிலக்காடுகளிலும் காணலாம்.