
7 படங்கள்
கண்ணோட்டம்
வெண்தொண்டை மீன்கொத்தி என்பது ஒரு மர மீன்கொத்தி. இது வெண்மார்பு மீன்கொத்தி எனவும் அழைக்கப்படும். மேலும் தமிழில் விச்சிலி, சிச்சிலி, பெருமீன்கொத்தி முதலிய பெயர்களும் உண்டு. இது உலகில் மேற்கில் பல்கேரியா, துருக்கி முதல் கிழக்கில் தெற்காசியா, பிலிப்பைன்சு வரை பரவியுள்ளது. இம்மீன்கொத்திகள் இவை சிறிய ஊர்வன, நிலநீர் வாழிகள், நண்டுகள், சிறு கொறிணிகள் முதலிய பலதரப்பட்ட உணவுகளை இரையாகக் கொள்கின்றன. இனப்பெருக்க காலத்தில் கட்டிடத்தின் உச்சி, மின்கம்பிகள் உள்ளிட்ட எடுப்பான இடங்களில் இருந்து ஒலியெழுப்புகின்றன.