
7 படங்கள்
கண்ணோட்டம்
சீழ்க்கைச்சிரவிஅல்லது சீழ்க்கைச் சிறகி என்பது ஆழமில்லாத ஈரநிலங்களிலும் சதுப்புநிலங்களிலும் காணப்படும் ஓர் வகை உயர்ந்து மெலிந்த வாத்தாகும். இவை பல்வேறு வெப்பமண்டலப் பகுதிகளான மெக்சிகோ, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, சகாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா, இந்திய துணைக்கண்டம் ஆகிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தியாவில் குறிப்பாக அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய பகுதிகளில் இவை காணப்படுகின்றன. காகிநாடாவிற்குத் தெற்கே தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இராமநாதபுரம் வரை இவற்றின் இனப்பெருக்க மண்டலமாகும்.