சர்பகந்தா எனப்படும் மூலிகைச் செடி தென்கிழக்கு ஆசியாவினைச் சார்ந்ததாகும். இத்தாவரம் கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் உயர் ரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்த பயன்பட்டதாக தெரிகிறது. சுமார் 400 ஆண்டுகளாக இதன் வேரை மூலிகையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுர்வேத நூலான சரஹ சம்ஹிதாவில் இதனைப்பற்றிய குறிப்பு காணப்படுகிறது.