
9 படங்கள்
கண்ணோட்டம்
கல்பொறுக்கி அல்லது பொன்னிற உப்புக்கொத்தி என்பது நடுத்தர உடல் அளவு கொண்ட உப்புக்கொத்திகள் வகையைச் சார்ந்த பறவை ஆகும். இதன் இறகுப்பகுதியில் கருப்பும் தங்க நிறமும் கலந்ததுபோன்ற வர்ணம் கொண்டு காணப்படுகிறது. இதன் கழுத்துப்பகுதியில் வெள்ளைக்கோடு கொண்டதாகக் காணப்படுகிறது. இதன் கால் பகுதில் கருப்பு நிறத்திலும் குளிர் காலத்தில் மஞ்சள் நிறத்திலும் தோற்றம் கொண்டு காணப்படுகிறது. வட அமெரிக்கா பகுதியில் காணப்படும் இப்பறவை குளிர் காலங்களில் ஆசியா மற்றும் ஆத்திரேலியாப் பகுதிகளில் குடியேறுகிறது. தொடர்ந்து 4800 கிலோ மீட்டர்கள் அதாவது 3 முதல் 4 நாட்கள் பறந்து அலாசுகாவிற்கும் ஹவாய்யிற்கும் இடையில் பறந்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.