
4 படங்கள்
கண்ணோட்டம்
பியர்சனின் நீண்டநக மூஞ்சூறு என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது சோலிசோரெக்சு பேரினத்தினைச் சார்ந்த ஒற்றைச் சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட தாழ் நில புல்வெளி. இது வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. இது சிங்கள மொழியில் ශ්රී ලංකා නියදිගු මා හික් මීයා என அறியப்படுகிறது.