
8 படங்கள்
கண்ணோட்டம்
கருஞ்சிவப்பு அல்லது ஊதாத் தேன்சிட்டு ஒரு சிறிய வகை தேன்சிட்டு. மற்றைய தேன்சிட்டுக்களைப் போல் இவற்றின் முக்கிய உணவு மலர்களின் தேன் ஆகும். எனினும் குஞசுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மை கொண்டு, ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் இயலும். இவை பூக்களின் அடியில் அமர்ந்து தேனை உட்கொள்ளும்.