உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கிறிச்சடை

Rainbow Runner

Elagatis bipinnulata

குறைந்த கவலை

கிறிச்சடை
Hugues Evano (IFREMER, Délégation océan Indien (DOI), Département Ressources Biologiques et Environnement (RBE), F-97420 Le Port, France) · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கிறிச்சடை என்பது சாக் குடும்பத்தின் பாரை இன கடல் மீன் ஆகும். இந்த மீனினமானது உலகின் வெப்பமண்டல கடல் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இவை கடலோர, கடல் பகுதிகளில் வசிக்கின்றன. கிறிசடை அதன் உடல் வடிவத்தால் எளிதில் இனம் காணக்கூடியதாக உள்ளது. அதன் உடலில் உள்ள அற்புதமான வண்ணங்களினால் பார்வைக்கு அழகாக உள்ளதால் இது ரெயின்போ ரன்னர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது வேகமாக நீந்தக்கூடியது. இது சிறிய மீன்களையும், தலைக்காலிகளையும், பலவகையான மிதவைவாழிகளையும், ஓடுடைய கணுக்காலிகளையும் வேட்டையாடி உண்கிறது. இந்த மீனினிமானது பாலியல் முதிர்ச்சியை 60 cm (24 அங்), அளவில் அடைகிறது. இதன் முட்டையிடுதல் வெவ்வேறு நேரங்களில் நடைபெறுகிறது, சில வகையின ஆண்டு முழுவதும் முட்டையிடுகிறன. பிற ஆண்டின் சில நேரங்களில் மட்டுமே முட்டையிடுகிறன. இது பல்வேறு மீன்பிடி முறைகளால் பிடிபடுகிறது. இது உண்பதற்கு சுவையான மீன் ஆகும். சிறிய கிறிசடை மீன்களை சூரை, சுறா போன்ற மீன்களை பிடிக்க போடும் தூண்டில்களில் சிலர் இரை மீக்களாக பயன்படுத்துகின்றனர். சிறிய அளிவலான கிறிச்சடை மீன்களை வடதமிழகத்தில் பூங்குழலி என அழைக்கின்றனர்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Rainbow runner — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கிறிச்சடை — CC BY-SA 4.0