உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கருந்தோள் பருந்து

Black-Winged Kite

Elanus caeruleus

குறைந்த கவலை

கருந்தோள் பருந்து
Tisha Mukherjee · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கருந்தோள் பருந்து என்பது பாறுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பகலாடி கொன்றுண்ணிப் பறவையாகும். மிகவும் சிறிய கரைவணைகளைப் போல திறந்த புல்வெளிகள் மீது வட்டமிடும் பழக்கத்துக்கு பிரபலமானது. இவை பாலியர்டிக் மற்றும் ஆப்ரோட்ரோபிகல் பறவை இனங்களுடனும், சில நேரங்களில் ஆத்திரேலிய சிறிய கரும்பருந்து மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவின் வெள்ளை வால் பருந்து ஆகியவற்றுடன் இணைந்து கலப்பினத்தை உருவாக்குகின்றன. இந்த பருந்து தனித்துவமானது, நீண்ட இறக்கைகள் கொண்டது; வெள்ளை, சாம்பல், கருப்பு இறகுகள்; சிவப்பு கருவிழிகளுடன் ஆந்தை போன்ற முன்னோக்கி எதிர்கொள்ளும் கண்கள் கொண்டது. ஆந்தை போன்ற நடத்தையானது ஆத்திரேலியாவில் உள்ள இதன் உறவு இனமான லெட்டர் விங்ஸ் பருந்தில் இன்னும் கூடுதலாக காணப்படுகிறது. கருந்தோள் பருந்துகள் முதன்மையாக சமவெளிகளில் காணப்பட்டாலும், இவை சில நேரங்களில் ஆசியாவின் உயரமான பகுதிகளில் மலைகளின் புல்வெளி சரிவுகளிலும் காணப்படுகின்றன. அவை வலசை சென்றவை அல்ல, என்றாலும் புயல் போன்றவற்றாலும், உணவு தேவைக்காவும் அலையும் நிலைக்கு உள்ளானவை. கொறிணிகளின் எண்ணிக்கையில் அவ்வப்போது ஏற்படும் எழுச்சியை இவை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. மேலும் பெரும்பாலான வேட்டையாடிகளைப் போலன்றி ஒரே ஆண்டில் பல குஞ்சுகளை வளர்க்கின்றன. தெற்கு ஐரோப்பாவில் இவற்றின் எண்ணிக்கை மனித நடவடிக்கைகளின், குறிப்பாக வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் எதிரொளியாக உயர்ந்துள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Black-winged kite — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கருந்தோள் பருந்து — CC BY-SA 4.0