
9 படங்கள்
கண்ணோட்டம்
தாழைக்கோழி என்பது நீர்க்கோழியில் ஒரு வகையாகும். இது இராலிடே குடும்பத்தைச் சார்ந்த பறவையாகும். உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.
பொதுவான தாழைக் கோழிகள் தாவரங்கள் நிறைந்த சதுப்பு நிலங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் பிற ஈரநிலங்களைச் சுற்றி வாழ்கின்றன. துருவப் பகுதிகளிலும் வெப்பமண்டல மழைக்காடுகளிலும் இவை காணப்படவில்லை. சில பிராந்தியங்களில் யூரேசியன் நாமக்கோழி தவிர, மற்ற இடங்களில் இது மிகவும் பொதுவான சிற்றினமாகக் காணப்படுகிறது.
புதிய உலகப் பொது நாமக்கோழி 2011-இல் அமெரிக்கப் பறவையியலாளர்கள் ஒன்றியம் மற்றும் பன்னாட்டுப் பறவையியல் குழுவினால் தனிச் சிற்றினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.