உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நீளவால் கீச்சான்

දිග වලිගැති මස්කෑදැත්තා Long-Tailed Shrike

Lanius schach

குறைந்த கவலை

நீளவால் கீச்சான்
JJ Harrison · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நீளவால் கீச்சான் அல்லது செம்பழுப்புமுதுகு கீச்சான் என்பது கீச்சான் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பூச்சிகளையும், சுண்டெலிகளையும் வேட்டையாடும் ஒரு பறவையாகும். இவை ஆசியா முழுவதும் பரவலாக பரவியுள்ளன, மேலும் இவற்றின் வாழிட வரம்பில் காணப்படும் இப்பறவைகளின் இறகுகளில் வேறுபாடுகள் உள்ளன. இந்த இனமானது ஆசியாவின் பெரும்பகுதியில், பிரதான நிலப்பகுதி மற்றும் கிழக்கு தீவுக்கூட்டங்களில் காணப்படுகிறது. கிழக்கு அல்லது இமயமலை துணையினமானது, L. s. tricolor, சில சமயங்களில் கருந்தலை கீச்சான் என்று அழைக்கப்படுகிறது. துணையினங்களுக்கிடையில் இறகுகளில் கணிசமான வேறுபாடுகள் இருந்தாலும், அவை அனைத்தும் நீண்ட, குறுகிய கருப்பு வால், உச்சந்தலையில் இருந்து கண்கள், நெற்றி உள்ள பகுதியையும் சேர்த்து கறுப்பு முகமூடி போன்று காணப்படும் கருப்பு நிறம், செம்பழுப்பு பிட்டம். பக்கவாட்டுகள் மற்றும் தோளில் சிறிய வெள்ளைத் திட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. திபெத்திய பீடபூமியில் இனப்பெருக்கம் செய்யும் சாம்பல்-முதுகு கீச்சான் உடன் இது ஒரு மிகையினமாக கருதப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Long-tailed shrike — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நீளவால் கீச்சான் — CC BY-SA 4.0