
8 படங்கள்
கண்ணோட்டம்
சுடலைக் குயில் அல்லது கொண்டைக் குயில் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படும் குயிலினப் பறவை. பருவமழை வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் வண்ணம் இப்பறவையின் வருகை இருப்பதாக இந்தியாவில் ஒரு நம்பிக்கை உள்ளது. இதில் ஓரளவே உண்மை இருப்பதாக மைகிரண்ட் வாச்சின் ஆய்வின் மூலம் அறியப்படுகிறது. இந்தியப் பழங்கதையியலில் இது சாதகப் பறவை எனவும் அறியப்படுகிறது. தொன்மங்களில் இப்பறவை மழை நீரை மட்டும் அருந்தும் என்றும், அதற்காக மேகத்தை நோக்கி வாயைத் திறந்து இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பறவையாது தவிட்டுக் குருவி போன்ற பறவைகளின் கூட்டில் முட்டையிடக் கூடியது.