
8 படங்கள்
கண்ணோட்டம்
கம்புள் கோழி, சம்புக்கோழி அல்லது வெண்மார்புக் கானாங்கோழி என்பது நீர்க்கோழி இனப்பறவை ஆகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும், தெற்காசியா முழுக்கப் பரவலாகவும் காணப்படுகிறது. இப்பறவையின் உடல் சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் முகமும், நெஞ்சும் வெண்மையாக இருக்கும். இப்பறவைகள் சதுப்பு நிலங்களில் கோரைகளை ஒட்டி குளம், குட்டைகளில் காணப்படும். இவை மற்ற நீர்க்கோழிகளை விட சற்றே துணிச்சலானவை. திறந்த சதுப்பு நிலங்களில் அல்லது பரபரப்பான சாலைகளுக்கு அருகில் உள்ள வடிகால்களில் வாலை நிமிர்த்துக்கொண்டு மெதுவாக அடியெடுத்து வைப்பதை அடிக்கடி காணலாம். இவை பெரும்பாலும் அமைதியானவை என்றாலும் இனப்பெருக்க காலத்தில், முதல் மழைக்குப் பிறகு, உரத்தக் குரலில் அடிக்கடி மீண்டும் மீண்டும் ஒலி எழுப்பம்.